News Ticker

Menu
Previous
Next

Latest Post

NEWS

REVIEWS

SOCIAL MEDIA

Recent Gallery

BLOGGING

SOFTWARES

Recent Posts

பேஸ்புக்கின் தலைமை அதிகாரியான Mark Zuckerberg தனது வேலையை விட்டு விலகினார்

Thursday, November 26, 2015 / No Comments
இன்றைய கால கட்டத்தில் உங்கள் அனைவருக்கும் பேஸ்புக்கின்  தலைமை அதிகாரியான Mark Zuckerberg ஐ தெரிந்திருக்கும்.இவரது கடும் உழைப்பே பேஸ்புக் எனும் சமூக வலைத்தளம் (social media) உருவாக காரணம். உருவாக்கிய அவரே அதில் இருந்து விலகி விட்டார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ????

ஆனால் நம்பி தான் ஆக வேண்டும். ஆதாரத்திற்கு கீழ் உள்ள LINK ஐ சொடுக்கவும் (click).

இதில் அவரே தனது முகநூல் கணக்கில் தான் பேஸ்புக்கில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்திருக்கிறார்.

எனினும் நீங்கள் இதைப்பார்த்து ஆச்சரியப்படவோ அதிசயப்படவோ தேவையில்லை... நீங்கள் மேலே பார்த்தது ஒரு மாயை (illusion).

இது பேஸ்புக்கில் உள்ள சிறு பிழை (minor bug).

ஆயினும் இது பெரிய அளவிலான பாதுகாப்பு (security) பிழையோ அல்லது தனியுரிமைக்கு (privacy) பாதிப்பு ஏற்படுத்தும் பிழையோ இல்லை.  ஆனால் இது சிலரால் தவறான வழிகளில் பயன்படுத்தக்கூடிய ஒன்று. ஒருவர் தனது வேலையை விட்டு விட்டார் என்று இன்னொருவரை நம்ப வைக்க இதைப்பயன்படுத்தலாம்.

இந்த பிழை Sachin Thakuri என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. இதை அவர் பேஸ்புக் பாதுகாப்பு குழுவிற்கு தெரிவித்தும் அவர்கள் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதை பேஸ்புக் நிறுவனம் விரைவில் சரி செய்யும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

இதை Sachin Thakuri யால் எப்படி செய்ய முடிந்தது ???

Sachin Thakuri,  Mark Zuckerberg இன் முக நூலில் இருந்த அவரது வாழ்க்கை நிகழ்வின் உண்மையான URL ஐ எடுத்து அதில் இருந்த அளவுருவை ஐ இல்லாது செய்ததின் விளைவே இது.

உண்மையான URL :
https://www.facebook.com/zuck/timeline/story?ut=32&wstart=-2051193600&wend=2147483647&hash=971179541251&pagefilter=3&ustart=1&__mref=message_bubble
இதில் இருந்து ustart=1 என்ற அளவுருவை (parameter) இல்லாது செய்துவிட்டு பார்த்தால் அவர் தனது வேலையை விட்டு விலகி விட்டார் என்றே வரும்...

அளவுரு (parameter) நீக்கிய URL :
https://www.facebook.com/zuck/timeline/story?ut=32&wstart=-2051193600&wend=2147483647&hash=971179541251&pagefilter=3&&__mref=message_bubble
இதை நாம் யாருடைய முகநூல் கணக்குகளிலும் செய்ய முடியும்.